தவெக மாநாட்டில் புதிய பாடல் வெளியீடு!

 
தவெக விஜய்
 


மதுரை மாவட்டத்தில்  தவெகவின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது.  புதிய பாடல் வெளியிடப்படுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  இந்த மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி  மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெற்று வருகிறது.

தவெக மாநாடு விஜய்

‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் தவெகவின் புதிய தீம் பாடல் இன்று ஆகஸ்ட் 21ம் தேதி வெளியிடப்படுகிறது. தவெக கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977ல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது குறித்து விஜய்யின் பேச்சும் பாடலில் இடம்பெற இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தவெக
“வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் 3வது அதிகாரப்பூர்வ கட்சிப் பாடலாக இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  இந்தப் பாடல் வெளியீடு குறித்து மேலும் உறுதியான தகவல்கள் மாநாட்டின் நிகழ்வுகளின் போது தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?