தவெகவினர் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம்..!

 
தவெக
 


 
தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வியூகத்தை வகுத்து வருகின்றன. அந்த வகையில் தவெகவை பொறுத்தவரை  தவெக தனித்து போட்டியா ? கூட்டணியா ? என முடிவாகாத நிலையில், செயற்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

தவெக
 அதன்படி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும்  வீடுவீடாக சென்று, ‘2026 மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்’ என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை பொதுமக்களின் வீடுகளில் ஒட்டி வருகின்றனர். அப்போது, அவர்களிடம், கடந்த ஆட்சி குறித்தும், தற்போது நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும், மக்களுக்கான தேவை என்ன என்பது  குறித்தும் பல்வேறு கருத்துக்களை கேட்டு பதிவு செய்கின்றனர்.

தவெக

அவ்வாறு பதிவு செய்ததை கட்சி தலைமைக்கும் அனுப்பி வருகின்றனர். இதேபோல், சமூக வலைதளங்களிலும், ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற பிரச்சாரத்தையும் தவெக தீவிரப்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?