1968இல் இமயமலையில் நடந்த கோர விமான விபத்து.. 4 ராணுவ வீரர்கள் கண்டெடுப்பு.. அதிர்ச்சி பின்னணி!

 
1968 இமயமலை விபத்து

1968ஆம் ஆண்டு இமயமலையில் நடைப்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் 56 வருடங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7, 1968 அன்று காஷ்மீரில் 102 வீரர்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படை விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. அதில் 102 பயணிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி பல ஆண்டுகளாக நீடித்தது. 2003 ஆம் ஆண்டில், மலையேறுபவர்கள் விமானத்தின் சில சிதறிய பகுதிகளைக் கண்டறிந்தனர், 2019 இல், ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தற்போது இந்திய ராணுவத்தின் மலையேறும் வீரர்கள் 4 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையில், மூவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் மல்கான் சிங், நாராயண் சிங் மற்றும் தாமஸ் செரியன் ஆவார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூரைச் சேர்ந்தவர் தாமஸ் செரியன் . தாமஸ் செரியன் சடலமாக மீட்கப்பட்டதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ராணுவ ஆவணங்களின் உதவியுடன், மல்கான் சிங்கின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவப் படையில் பணியாற்றிய ராணுவ வீரர் நாராயண் சிங்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் கர்வால் சாமோலி தாலுகா கோல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொரு உடல் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web