2026 தேர்தல் தான் தவெக இலக்கு... புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

 
சீமான் விஜய்

 தமிழ் திரையுலகில் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய  கட்சியை  பிப்ரவரியில் தொடங்கியுள்ளார். கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியல்  இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில்  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை மாநிலக் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றது தேர்தல் ஆணையம். 2026ல்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

விஜய்
இந்நிலையில் புதுக்கோட்டையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “சீமானுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். சட்டசபைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளது. அவசரப்பட வேண்டாம். ஜூன் 18ம் தேதி தவெக நிர்வாகிகள் கூட்டம் எதுவும் கிடையாது.  2026 சட்டமன்ற தேர்தல் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு. 2026ல் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். ஜூன் 18ம் தேதி சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி உண்மையல்ல” எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web