இன்று 4வது டெஸ்ட் போட்... இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

 
இந்தியா
 

இன்று 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி பதிலடி கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரை சமனுக்கு கொண்டு வரும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய நிதிஷ்குமார் ரெட்டி இடத்தில் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. மற்றபடி ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் பந்து வீச்சு தாக்குதல் தொடுக்க ஆயத்தமாக உள்ளனர். 

இந்தியா இங்கிலாந்து

இந்த தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய டெஸ்டில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டரில் அவ்வப்போது மழை பெய்கிறது. போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. அத்துடன் ஆடுகளமும் ஈரமாக இருப்பதால் இத்தகைய சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை நன்கு கணித்து எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். இல்லாவிட்டால் தாக்குப்பிடிப்பது கடினம் தான்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?