பதினாறு வயசு... மாணவியை கர்ப்பமாக்கிய தாத்தா... அதிரடி காட்டிய நீதிமன்றம்.. சபாஷ் சொன்ன மக்கள்!

 
மாணவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி சேர்ந்தவர் வீரமுத்து (65). இவர் அப்பகுதியில் குத்தகைக்கு விளை நிலத்தை எடுத்து விவசாயம் செய்துவந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி வீரமுத்து அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார்.

அதாவது, மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் வீரமுத்து கேலி செய்துள்ளார். வீட்டில் மாணவி தனியாக இருந்ததை அறிந்து சென்ற வீரமுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதே போன்று அடுத்தடுத்து அவரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

மாணவி

மேலும், சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இச்சூழலில் 2020 மார்ச் பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தபோது, அவா் கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும், அன்று மாலையே அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் பெற்றோர், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுதொடர்பாக சிறுமியின் தாயார் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வீரமுத்து மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று அவ்வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.  

மாணவி

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் வீரமுத்துவிற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் கட்டத்தவறினால் 6 மாதம் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web