வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது நேர்ந்த விபரீதம்.. பரிதாபமாக பலியான சிறுவன்!

 
பகீர் ரிப்போர்ட்!! கை கால்களை வெட்டி வீசிய 14 வயது சிறுவன்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் வசிப்பவர் செல்வகுமார பாண்டியன். அவர் அச்சகத்தில் பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி காமேஷ் அருண்குமார் (12), கமலேஷ் அருண்குமார் (12), இரட்டை குழந்தைகள் மற்றும் சக்தி காவ்யா (8) என்ற மகளும் உள்ளனர்.

சிறுவன் பலி

இரட்டை சகோதரர்கள் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர். செல்வகுமாரும், அவரது மனைவியும் நேற்று வேலைக்கு சென்றனர். கோடை விடுமுறையால் குழந்தைகள் வீட்டில் இருந்து விளையாடி வந்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக தொட்டிலில் போடப்பட்டிருந்த துணி கமலேஷ் கழுத்தில் சிக்கியது.

இதில் மயங்கி விழுந்த சிறுவனைப் பார்த்து குழந்தைகள் அலறி துடித்தனர். இதக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகாசி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web