பாலத்தில் சென்றபோது கோர விபத்து.. ஓடையில் கவிழ்ந்த பேருந்து.. 8 பேர் பலியான சோகம்!
![பதிண்டா பேருந்து விபத்து](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/ceb70fae96c15949105e1203f2bcbc2f.jpg)
பஞ்சாப் மாநிலம் தல்வாண்டியில் இருந்து பதிண்டாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று பாலத்தில் இருந்து தவறி ஓடையில் விழுந்தது. கனமழையின் போது விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பாலத்தில் தடுப்புச்சுவர் இருந்திருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்கலாம்.
பேருந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதற்கு கனமழை காரணமா? என மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேருந்து அதிவேகமாக பயணித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்திருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகள் செய்யப்படும் என்றும் பதிண்டாதுணை ஆணையர் தெரிவித்தார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!