வீட்டை விட்டு துரத்திய வளர்ப்பு மகன்... சாலையில் படுத்து போராடிய வயதான தம்பதி!

 
விசாலாட்சி


     
புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கராசு. இவருடைய மனைவி  விசாலாட்சி .  இவர்களது வளர்ப்பு மகன் கலையரசன்.  கலையரசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள்  உள்ளனர். இந்நிலையில் கலையரசன் வளர்த்த பெற்றோர்கள்  2 பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கலையரசனின் மனைவி பிரியதர்ஷினி மற்றும் மகள் நந்தினி ஆகியோர் தங்கராசுவின் வீட்டை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  

போலீஸ்


இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த வயதான தம்பதியினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உறவினர்களுடன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் அவர்களை அங்கிருந்து கிளப்ப முயன்ற போது அதில் ஒருவர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார்  அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!