கள்ளக்காதல் விவகாரம்.. கோபத்தில் மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. அதிர்ச்சி பின்னணி!

 
கள்ளக்காதல்

திருப்பத்தூரை அடுத்த கொரட்டி பாம்புகாரன் வட்டத்தைச் சேர்ந்தவர் கணபதி. 14 ஆண்டுகளாக பீகார் ராணுவத்தில் நாயக் என்ற பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி என்பவரை திருமணம் செய்து கொண்டு 4 வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது மனைவி சத்யா (28) என்பவருடன் கணபதிக்கு திருமணத்துக்குப் புறம்பாகத் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கணபதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணபதிக்கும், அவரது மனைவி வினோதினிக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு சத்யா தான் காரணம் என நேற்றிரவு வினோதினி மற்றும் அவரது தாயார் சத்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, ​​இன்று காலை மீண்டும் கணபதிக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, மகன் கிஷோரை தூக்கிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர், திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சில மணி நேரம் போராடி வினோதினியை பத்திரமாக மீட்டனர். அப்போது, ​​நான்கு வயது சிறுவன் கிஷோர் நீரில் மூழ்கி இறந்தான்.

பின்னர் தீயணைப்பு துறையினர் சிறுவனின் உடலை மீட்டு திருப்பத்தூர் ரூரல் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சத்யாவும் தற்கொலைக்கு முயன்றார்.இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யா தற்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web