கள்ளத்தொடர்பு விவகாரம்.. ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

 
ஸ்ரீரங்கம் காவல் நிலையம்

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும், போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் பெண் காவலருக்கும் சில ஆண்டுகளாகத் தொடர்பு இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன் பெண் போலீஸ் ஒருவருக்கு ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருடன் பழகுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

கள்ளக்காதல்

இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபமடைந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவருடன் பெண் காவலர் உல்லாசமாக இருந்த சம்பவம் அவருக்கு தெரியவந்தது. உடனே ஆட்டோ டிரைவரை தேடினார்.அப்போது, ​​சேலம் சாலையில் ஆட்டோ டிரைவர் செல்வதாக தகவல் கிடைத்ததும், தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சிறுகாம்பூர் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிவிட்டுச் சென்றார்.

சஸ்பெண்ட்

படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, சம்பந்தப்பட்ட போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டை ஆயுதப்படைக்கு மாற்றினார். இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web