செம... ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு!!

 
ஆசிரியர்கள்

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள்  பழைய பென்ஷன், ஒரே பணிக்கு ஒரே ஊதியம், வயது வரம்பு உயர்வு என பலவிதமான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கும் ஆசிரியர்கள் சங்கத்திற்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது  செய்யப்பட்டு சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்டனர்.

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஆசிரியர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு முறைப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது    பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த  வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  

ஆசிரியர்கள்

இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், "ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்" என தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை   தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியில் சேர பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 53 ,   இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 58 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web