சாகசம் செய்கிற வயசு... நண்பர்களிடையே கெத்து காட்ட ரயில் மீதேறிய கல்லூரி மாணவன் மரணம்!

 
ஜோஸ்

நண்பர்களிடையே கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டு பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார் பிபிஏ படித்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர். நண்பர்கள் இடையே பேசிக் கொண்டிருந்த போது, ரயிலின் மீது ஏறி நிற்பது குறித்து சவால் எழுந்துள்ளது. உடனடியாக எந்த விதமான முன்யோசனையும் இன்றி சரக்கு ரயிலின் மேல் ஏறிய 17 வயதுடைய கல்லூரி மாணவர் ஜோஸ், தண்டவாளத்தின் மேல் இருந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், எடப்பள்ளியில் உள்ள அமிர்தா மருத்துவமனை அருகே உள்ள வாய்மேலி பகுதியைச் சேர்ந்த பிபிஏ படித்து வந்த மாணவர் ஆண்டனி ஜோஸ் உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மின்சாரம்

85% தீக்காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை எடப்பள்ளி ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற ரயிலின் மீது மாணவர் ஆண்டனி ஏறியுள்ளார். திடீரென மின்சாரம் தாக்கியதில், ஆண்டனியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இரவு 8 மணியளவில் 80 சதவீதம் தீக்காயங்களுக்கு ஆளான அவர் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

போலீஸ்
இது குறித்து எலமக்கரை போலீசார் கூறுகையில், அந்தோணி உள்ளிட்டோர் தங்கள் நண்பரின் பிறந்தநாளுக்கு கேக் வாங்க சென்றுள்ளனர். நண்பர்கள் முதலில் ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தின் மறுபுறம் கடந்து சென்றனர். அந்தோணி ரயிலின் மேல் ஏறி மறுபுறம் இறங்க, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். ஆலப்புழாவில் உள்ள XL கண்ணாடி தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர் ஜோஸ் ஆண்டனி மற்றும் லூர்து மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் சௌமியா ஆகியோரின் ஒரே மகன் ஆண்டனி ஜோஸ். இன்று பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web