ஜூலை 7ம் தேதி திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 
திருவண்ணாமலை

 திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவ விழாவும் ஒன்றாக கருதப்படுகிறது.  தட்சணாயன புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா ஜூலை 7ம் தேதி (திங்கட்கிழமை) சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு
ஜூலை 6ம் தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை  கோவிலில் விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 7ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர். அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.  

திருவண்ணாமலை

தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. ஜூலை  16ம் தேதி வரையில் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரணிதரன், நிர்வாக அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?