நெகிழ்ச்சி வீடியோ... பராமரித்தவர் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத குரங்கு!!

 
குரங்கு

மனிதர்களுக்கு மட்டுமல்ல  விலங்குகளிடையே அன்பு, பிரியம், நன்றி உணர்ச்சி எல்லாம் உண்டு என பல்வேறு தருணங்களில் காண்கிறோம். அதிலும் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் எஜமானர்களுக்கு ஒன்று என்றால் பதறி துடித்து விடும். அதே போல்  தெருவில் சுற்றித்திரியும் பிராணிகளுக்கு உணவளிப்பவர்களையும் அந்த விலங்குகள்  தேவையான நேரத்தில் நன்றியை வெளிப்படுத்தும்.   அந்த வகையில் ஒரு குரங்கு  தனக்கு உணவளித்து பராமரித்து வந்த நபர், திடீரென்று இறந்த நிலையில் இறுதிச் சடங்கு பயணத்திலும் உடன் பயணித்தது. உடலை பார்த்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தியது.  இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா பகுதியில் உயிரிழந்தவர் ஒருவரின்  உடல் அருகே உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். திடீரென எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று அவரது காலடியில் அமர்ந்திருந்த பெண்ணின் கையைபிடித்து அழுதது. அதன் துக்கத்தை கண்டு நெகிழ்ந்த உறவினர்கள்   அதனை வீட்டில் இருந்து சுடுகாடு வரையிலும் அழைத்துச் சென்றனர். அனைத்து தருணங்களிலும் அவரது உடலுக்கு அருகிலேயே சுற்றி வந்த அந்த குரங்கு, அவருக்கு இறுதி மரியாதையை செலுத்தியது. அந்த நபர்  ராம் குன்வார் சிங். இவர் தொடர்ந்து 2   மாதங்களாக குரங்கிற்கு   பிரெட், ரொட்டி போன்ற உணவுகளை வழங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குரங்கு எங்கு ஊர் சுற்றினாலும் சரியான நேரத்திற்கு இவரை பார்க்க வந்துவிடுமாம்.

குரங்கு  பிடிபட்டது


இருவரும் கொஞ்ச நேரம் விளையாடி கொண்டிருப்பதும் தினசரி வாடிக்கையானது . அதே போல் வழக்கமான நேரத்தில் வந்த குரங்கு அவர் இறந்ததை அறிந்ததும்  கண்ணீர் விட்டு அழுதுவிட்டது. அந்த நபரை புதைத்த பிறகும் கூட, வெகுநேரம் அங்கேயே இந்த குரங்கு நின்று கொண்டிருந்தது.  அவரது உடலை, துணியை நீக்கிப் பார்த்து மனிதனைப் போலவே அந்தக் குரங்கு அழுதது. அது மட்டுமல்ல, துக்கமான சமயத்தில் சக மனிதர்களின் கரங்களை நாம் பற்றிக் கொள்வதைப் போல  துக்க நிகழ்வில் இருந்த பெண் ஒருவரின் கரங்களை பற்றிக் கொண்டு அழுது கொண்டிருந்தது காண்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web