அழுதுக்கொண்டே இருந்த குழந்தை.. விரக்தியில் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை!

 
 அழகு மீனா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வேலயப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அழகு மீனா (34). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேதாஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குழந்தை வேதாஸ்ரீ உடல்நிலை சரியில்லாமல் அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவர்களிடம் காட்டியும் பலனில்லை என்று தெரிகிறது. குழந்தை அழுது கொண்டே இருந்ததால், அழகு மீனா மனமுடைந்தார்.

இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் அழகு மீனா தனது 6 மாத குழந்தையுடன் வீட்டின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். பின்னர் பெட்ரோலை எடுத்தார். அப்போது அழகு மீனா தன் மீதும், தன் குழந்தை மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். குழந்தை உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறி துடித்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

அங்கு குழந்தை வேதாஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அழகு மீனா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து சிவகங்கை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருப்புவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web