சிக்சருக்கு பறந்த பந்து... நடிகை நமீதாவின் வைரல் கிரிக்கெட் வீடியோ!

 
நமீதா

இப்போதும் ஆறடி உசர அரேபிய குதிரையைப் போல தான் இருக்கிறார் நமீதா. மைதானத்தில், பேட்டைப் பிடித்து பந்தைப் பறக்க விட்டதும் மொத்த  ரசிகர்கள் கூட்டமும், கட்சியினரும் உற்சாகமாகிறார்கள். 2004 ல் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நமீதா. இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர்.  இவர் நடிப்பில் வெளியான ‘சொந்தம்’ , ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி  என பல படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.  தமிழில் ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ்  படங்கள் இவரது நடிப்பில் சக்கை போடு போட்டன.


இவர் ஆங்கிலப்படத்திலும் நடித்தார்.  திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகியிருக்கும் நடிகை நமீதா  தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல்வாதியாகி வருகிறார். இவர் கோவையில்  பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியைத் துவங்கி வைத்தார்.அன்னையர் தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த நமீதா “எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

நமீதா

அம்மாவாக என்னுடைய முதல் அன்னையர் தினம். மைசூர் சிங்கம் அண்ணாமலை வந்ததுக்கு பிறகு பாஜக கட்சி நல்லா வளர்ந்துட்டு இருக்கு. எங்க போனாலும் பாஜக பத்தி தான் பேசறாங்க. இப்போ அவரோட பார்வை தமிழ்நாட்டு மேல இருக்கு” எனக் கூறினார் கர்நாடக தோல்வி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு  “தலைவர் அண்ணாமலை தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயலாற்றுகிறார். பிரதமர்  மோடி மேல், தலைவர் அண்ணாமலை மேல் நம்பிக்கை இருக்கிறது. இன்று இல்லை என்றாலும் இன்னொரு நாள் நடக்கும்” எனக் கூறியுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web