மிகப் பெரிய சதி முறியடிப்பு... குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது!
குஜராத்தில் பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த 3 பேர், ரசாயன தாக்குதலுக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத் போலீசாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காந்திநகர் மாவட்ட அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு அகமது மொகியுத்தின் சையத் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், செல்போன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சையத் ஐதராபாத்தை சேர்ந்தவர். விசாரணையில், அவர் ஆசாத் சுலைமான் ஷேக், முகமது சுகைல் சலீம் ஆகியோருடன் தொடர்பில் இருந்தது தெரிந்தது. ஆசாத் மற்றும் சலீம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கைதான சையத் சீனாவில் எம்.பி.பி.எஸ். படித்தவர். ரிசின் எனப்படும் கொடூர ரசாயன விஷத்தை தயாரித்து, அதனை பயன்படுத்தி லக்னோ, டெல்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாத சதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்.

சையத் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அபு கதிஜா வழிகாட்டலில் செயல்பட்டுள்ளார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பலருடன் தொடர்பில் இருந்தார். இவர்களுக்கான ஆயுதங்கள் பாகிஸ்தான் எல்லை வழியாக டிரோன் மூலம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான இடங்களில் 3 செல்போன்கள், 2 லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் கைதான மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது உபா உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
