உலகிலேயே மிகப் பெரிய கட்சி பாஜக... திமுக லிஸ்ட்லேயே இல்லை! அதிமுகவுக்கு 7வது இடம்!

 
ஜெயலலிதா

தொண்டர்களின் எண்ணிக்கையை வைத்து தான் அரசியல் கட்சிகளின் பலம் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களிடம் இத்தனை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கம், ஆனால் அவை எல்லாம் வாக்குகளாக மாறினால் மட்டுமே அந்தந்த கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும், ஆட்சி அதிகாரமும் உறுதி செய்யப்படும். மற்ற நாடுகளில் மாறுப்பட்டாலும் இந்தியாவில் ஓட்டு வங்கியை வைத்து தான் இது நாள் வரையில் அரசியல் செய்யப்பட்டு வருகிறது.

மோடி

இந்தியாவில் தேர்தலில் கணிசமாக ஓட்டுக்களை பெறவில்லை என்றால், அந்த கட்சியின் அங்கீகாரமும் பறிக்கப்படும். இப்படி ஒட்டுமொத்த அரசியலின் ஆணி வேராக இருப்பது தொண்டர்கள் தான். அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசும் போது, 'இந்தியாவில் 2000த்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவை அனைத்தும் முக்கிய கட்சிகளாக உருவெடுப்பதில்லை. காரணம் தொண்டர்களின் எண்ணிக்கை தான்.

இந்நிலையில் உலகிலேயே மிகப் பெரிய கட்சி எது என தொண்டர்களின் அடிப்படை யில், வேர்ல்டு அப்டேட் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி, ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் 15 கட்சிகள் அடங்கியுள்ளன.

ஸ்டாலின்

ஆய்வின் முடிவில் உலகின் மிகப் பெரிய கட்சியாக முதலிடத்தை பாஜக பிடித்துள்ளது. 2வது இடத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியும், 3வது இடத்தை அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும், 4வது இடத்தை காங்கிரஸ் கட்சியும் பிடித்துள்ளன. இந்தப்பட்டியலில் 7வது இடத்தில் அதிமுகவும், 9வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சியும், 14வது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியும் உள்ளன. திமுக பட்டியலிலேயே இல்லை என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web