குழந்தைப்பேறு அருளும் வரப்பிரசாதி தொட்டாற்சிணுங்கி..!!

 
தொட்டாற்சிணுங்கி

ஈரப்பதமான இடங்களில் தானாகவே வளர கூடியது இந்த தொட்டா சிணுங்கி செடி, சின்ன சின்ன முட்களும், ஊதா கலர் பூக்களும் நிறைந்திருக்கும். சாயங்காலம் ஆகிவிட்டால், இந்த செடியின் இலைகள் தானாகவே மூடிக்கொள்ளுமாம். அதேபோல, யாராவது விரல்களில் தொட்டாலும், மூடிக்கொள்ளும்.. அதேபோல, சிறு அதிர்வு வந்தாலும், மறுபடியும், இலைகளை மூடிக்கொள்ளுமாம். ‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். குளிர்ச்சியை தரக்கூடிய இந்த இலைகள் தரும் பலன்கள் என்னென்ன தெயுமா?

தொட்டாற்சிணுங்கி

பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் அதிக உதிரப்பெருக்கு இருந்தால், இந்த தொட்டால்சிணுங்கி இலையை பறித்து சுத்தம் செய்து, சின்ன வெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து, மோரில் கலந்து தந்தாலே போதுமாம்.. ரத்தப்பெருக்கு கட்டுப்படுவதுடன், வயிறுவலியும் தீரும். ஆனால், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே, இந்த பானத்தை குடித்துவந்தால், இன்னும் பலன் அதிகமாக கிடைக்கும். அல்லது இந்த செடியிலிருந்து சாறு எடுத்து, 4 ஸ்பூன் சாற்றில், 2 ஸ்பூன் தேன் கலந்து, தினமும் 3 வேளைகள் குடித்தாலும், அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

இந்த இலையை அரைத்து பசும்பலில், 15 கிராம் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.. அதேபோல, உடல்சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகள், சிறுநீர்கடுப்பு, மூலநோய், வயிறு எரிச்சல், போன்றவற்றுக்கு மிகப்பெரிய பலனை இந்த தொட்டால் சிணுங்கி தருகிறது. இந்த சேடியின் வேரையும், இலையையும் காயவைத்து, பொடி செய்து, சலித்து வைத்து கொண்டு, 15 கிராம் பசும்பாலில் கலந்து குடித்தாலே, சிறுநீர் தொந்தரவுகள், மூலப்பிரச்சனைகள் தீருமாம். அல்லது இந்த இலையை மட்டும் ஒரு பிடி எடுத்து அரைத்து, மோரில் கலந்து குடித்தாலும், வயிற்று கடுப்பு குணமாகுமாகும், வயிறு புண்களும் ஆறும்.
 

அல்லது இந்த செடியின் வேர் மட்டும் எடுத்து, தண்ணீர் விட்டு, சுண்ட கொதிக்க வைத்து, தினமும் 3 வேளை அரை அவுன்ஸ் குடித்து வந்தாலும் சிறுநீர் கடுப்பு தீரும். அடைபட்ட சிறுநீரும் முழுவதுமாக வெளியேறும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொட்டா சிணுங்கி வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இவர்களும், இந்த செடியின்இலை, வேர் இரண்டையுமே காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் வருமாம். அல்லது இந்த முழு தாவரத்தையும் உலர்த்தி, தூள் செய்து, தினமும் ஒரு ஸ்பூன் காலையில் வெந்நீருடன் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 

வயிறு வலி
காக்கா வலிப்பு, பக்கவாதம், போன்றவற்றை போக்கவல்லது இந்த தொட்டா சிணுங்கி.. அத்துடன், உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, புண்களையும் ஆற்றக்கூடியது. குளிர்ச்சி தரக்கூடிய இந்த இலையை அரைத்து, சருமத்தில் பூசிவந்தால், நமைச்சல், அரிப்பு, தேமல் போன்றவைகளை நீங்கும். அல்லது இந்த இலையின் சாறு மட்டும் எடுத்தும் சருமத்தில் தடவி வரலாம் அல்லது, இந்த இலைகளை பறித்து சாறு எடுத்து, புண்கள் மீது தடவி, அதில் ஒரு வெற்றிலையை வைத்து கட்டிவந்தாலும், புண்கள், காயங்கள் விரைவில் ஆறும். கை, கால் மூட்டு வீக்கம், அலர்ஜி, தோல் தடிப்புகள் குணமாக வேண்டுமானால், இந்த இலையை அரைத்து விழுதுபோல பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், விரைவில் பலன் கிடைக்கும்.
 
உடலில் எங்காவது வலி ஏற்பட்டால், இந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஒத்தடம் தந்தால் போதும். உள்ளுக்குள் மருந்தாக எடுக்கும்போது, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த தொட்டால் சிணுங்கியை பயன்படுத்தினால், முழு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web