ரெஸ்டோ பாரில் பெண் பவுன்சருக்கு பாலியல் தொல்லை... முதலாளியுடன் சக ஊழியர்களும் சேர்ந்து தாக்கிய கொடூரம்!
சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த வடிவாம்பிகை (46) என்ற பெண், சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், சென்னை அசோக்நகரை அடுத்துள்ள ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் காசி டாக்கீஸ், மூன்றாவது மாடியில் இருக்கும் லாங் டிரைவ் ரெஸ்ட்ரோ பார் மற்றும் உணவகத்தில் பெண் பவுன்சராக பணியமர்த்தி, மாதச் சம்பளம் என்று சொல்லி முதலாளி எனக் கூறிக்கொள்ளும் தாணு என்பவர், வேலை கொடுத்தார். 30,000 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் நான் வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களாகியும் எனக்குச் சம்பளம் மாதந்தோறும் சரியாகக் கொடுக்கப்படவில்லை, இடையிடையே சுமார் ரூ.40000/ மட்டுமே எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இதனால் எனது மாதாந்திர குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாததால் எனது நிலுவைத் தொகையை தாணுவிடம் கேட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுகிறேன் என்றேன். சம்பள பாக்கியை தர மறுத்தது மட்டுமின்றி, என் பேச்சை கேட்டு, என் விருப்பத்திற்கு செவி சாய்த்தால், அனைத்தையும் செய்து தருகிறேன் என்றும் குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி, சம்பளத்துடன் உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என, என்னிடம் மிகவும் மோசமாகவும், ஆபாசமாகவும் பேசினார்.
அதற்கு மறுத்ததால் மறுநாள், 15.04.2024 அன்று அதிகாலை 5 மணியளவில், கண்ணாடி பாட்டில் மற்றும் இரும்பினால் என் உடல், பின் தலை, குரல் நாண், மார்புப் பகுதி, வயிறு, வலது கண் மற்றும் இடது காது ஆகிய இடங்களில் அடித்து பாலியல் வன்கொடுமை செய்தார். தடி மற்றும் கைகளால் என்னை குத்தினார். தாணு என்னை மிகவும் மோசமாக கால்களால் மிதித்து, மிகவும் பயங்கரமாக தாக்கினார், நான் வலியில் துடித்தேன்.
தாணுவின் கூட்டாளிகளான ராஜ்குமார், அஜித் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என்னைச் சுற்றி நின்று கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு என்னைத் தப்பிக்க விடாமல் தடுத்தனர். எனவே அவர்கள் என்னை கொடூரமாக தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்ததால், இதைப் பற்றி நான் வெளியே சொன்னாலோ அல்லது காவல்துறையில் புகார் அளித்தாலோ, என்னையும் என் குடும்பத்தினரையும் மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொன்று விடுவேன் என மிரட்டினார். எனவே என்னை காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
