தாயுடன் ஷாப்பிங் சென்ற சிறுவன்.. திடீரென ஓடி வந்து கத்தியால் குத்தி கொன்ற சைக்கோ லேடி!

 
ஓஹியோ கொலை

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் நகரிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஓஹியோவில் உள்ள ஜெயண்ட் ஈகிள் கடையில் ஷாப்பிங் செய்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஒரு தாயும் மகனும் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றனர்.

அப்போது எங்கிருந்தோ வந்த மர்ம பெண் ஒருவர் பின்னால் ஓடி வந்து அந்த சிறுவனை கத்தியால் குத்தினார். பின்னர் அந்த  மர்ம பெண், அருகில் இருந்த தாயையும் கத்தியால் குத்தி தாக்கினார். இதையடுத்து, பலத்த காயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும், பலத்த காயமடைந்த தாய், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உயிர் தப்பினார்,'' என, போலீசார் தெரிவித்தனர். மேலும், அந்த பெண்ணை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web