காதலியை கைவிடாத முறைப்பையன்.. ஆத்திரத்தில் கொடூரமாக வெட்டி கொன்ற தாய் மாமன்.. ஷாக் பின்னணி!

 
விக்டர்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-பச்சியம்மாள் தம்பதி. இவர்களது மகன் விக்டர் (21) நாகர்கோவிலில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பேச்சியம்மாளின் தம்பி காசி. இந்நிலையில் தாய்மாமன் காசியின் 17 வயது மகளும், விக்டரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதற்கு காசியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று விக்டர் தனது 17 வயது காதலியை சந்திக்க பாப்பாக்குடிக்கு வந்தார்.பின்னர் இருவரும் சந்தித்து பேசினர். இதை பார்த்த சிலர் காசியிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காசி மற்றும் அவரது மகன் தங்கசெல்வன் இருவரும் சேர்ந்து விக்டரை அரிவாளால் வெட்டினர்.இதில் விக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காசி, அவரது மகன் தங்க செல்வன் (19) உள்ளிட்டோரை பாப்பாக்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், விசாரணையில், கடந்த ஆண்டு சிறுமியை அழைத்துச் சென்றதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் விக்டர் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு விடுதலையானதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web