“என் பொண்ணு கூட பழக கூடாது...” தடை விதித்த தாயை சுட்டுக் கொன்ற சிறுவன்!

 
துப்பாக்கி சூடு
 

என் பொண்ணு கூட பேசக் கூடாது. அவளோட பழகாதே என்று சிறுவனை எச்சரித்த இளம்பெண்ணின் தாயை, துப்பாக்கி வாங்கி, சுட்டுக் கொலை செய்து அதிர வைத்திருக்கிறான் டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்.நேற்று வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவரை சிறுவன் சுட்டுக் கொலை செய்து விட்டு, தப்பி ஓடியிருக்கிறான். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனையும், அவனது 2 நண்பர்களையும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 

துப்பாக்கி ரத்தம் க்ரைம் தற்கொலை கொலை


இது குறித்து போலீசார் கூறுகையில், "சிறுவன் கொல்லப்பட்ட பெண்ணின் மகளுடன் பழகி வந்துள்ளான். இதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த சிறுவன் அவரை கொல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளான். இதையடுத்து தனது இரு நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு, அவர்கள் கூறியதன் பேரில் துப்பாக்கி வாங்கி, இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான்.கொலை சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பு சிறுவன் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளான்.

துப்பாக்கி

இந்த ஸ்டேட்டஸ் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.இது தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றனர்.மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்த தாயை சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web