ரூ5 நாணயத்தை விழுங்கிய சிறுவன்... கதறித் துடித்த பெற்றோர்!

 
வினீத்

 லீவு விட்டாச்சு... இந்தப் பிள்ளைகள வீட்டில வச்சி சமாளிக்கிறது பெரும்பாடா இருக்கு... ஒரு சமயம் வெயில்லயே கிடந்து சுத்தறான்.... ஒரு சமயம் போனையே கைல வச்சிட்டு இருக்கான்... திட்டினா எதாவது ஒரு வம்ப விலைக்கு வாங்கிட்டு வர்றான் என்ற பெற்றோர்களின் புலம்பல் தொடங்கிவிட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை  காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவா விஜயபிரியா தம்பதி. இவர்களின் 10வயது மகன் வினீத் விடுமுறை நாளில்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

வினீத்

அப்போது அவரது கையில் இருந்த ரூ5 நாணயத்தை விழுங்கிவிட்டான். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள்  எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூ நாணயம் சிக்கி இருந்ததை கண்டறிந்தனர்.  தொண்டை பகுதியில் சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமலேயே அதை வெளியே எடுக்க முயற்சி மேற்கொண்டனர்.

அதே போல்  குறித்த நேரத்தில் சிறுவன் விழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினர். வெற்றிகரமாக நாணயத்தை வெளியே எடுத்ததும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் அனைவருக்கும்  சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் மருத்துவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும்  தெரிவித்துக் கொண்டனர்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!