தங்கையை 2 வருடங்களாக வன்கொடுமைச் செய்த அண்ணன்... வீடியோ காட்டி ப்ளாக்மெயில் செய்து வந்த அதிர்ச்சி!

 
சிசிடிவி செக்ஸ் பலாத்காரம் பாலியல் தம்பதியர் தேனிலவு செல்போன்

ராஜஸ்தானில் மாநிலத்தில் சுரூ மாவட்டத்தில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இளம்பெண்ணின் அண்ணன் முறையுள்ள இளைஞர், இளம்பெண் தனியே இருந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோவையும் பதிவு செய்து கொண்டு, வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, தொடர்ந்து 2 வருடங்களாக இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

19 வயதுடைய இளம்பெண்ணின் பெரியப்பா மகனான இளைஞர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அண்ணன் முறை என்பதால், அப்பெண்ணின் வீட்டினரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்பெண்ணும் சகஜமாக பழகி வந்த நிலையில், கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் வழக்கம் போல சகோதரி வீட்டிற்கு சென்ற இளைஞர், வீட்டில் பெற்றோர் இல்லாததைத் தொடர்ந்து, பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது அண்ணனே, தன்னைக் கற்பழித்தது கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக தான் பாலியல் தொல்லைக் கொடுத்ததை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்.

தான் பதிவு செய்த வீடியோவைக் காட்டி, இதை வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி, தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக பாலியல் கொடுமை கொடுத்து வந்துள்ளார்.

செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண், ஒரு கட்டத்தில் கொடுமைகள் தாங்க முடியாமல், தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியழுதப்படி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தாயார், இது குறித்து ரத்தனாகர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணுடன் புகாரளித்தார்.   புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, இளைஞரைக் கைது செய்தனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம

From around the web