49 பெண்களை கொன்று உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர மனிதன்... சிறையில் மரணம் !
ஆயுள் தண்டனை கைதியான ராபர்ட் பிக்டென் மே 19ம் தேதி சக கைதிகளால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராபர்ட் பிக்டென் 1990 முதல் 2000 ம் ஆண்டு தொடக்கம் வரை கனடாவின் வான்கூவரில் 40க்கும் மேற்பட்ட பெண்களை தமது பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளார். அத்துடன் அவர்களின் உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக இட்டுள்ளார். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்குகளின் தீர்ப்பின்படி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த Robert Pickton சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த கனடாவையே நடுங்கவைத்த சில குற்றவாளிகளில் இவரும் ஒருவர். இவரது குலைநடுங்கவைக்கும் செயல் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. தற்போது 74 வயதான ராபர்ட் பிக்டனை சக கைதி ஒருவர் தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ராபர்ட் பிக்டன் 40க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்திருந்தாலும் 6 கொலைகளில் மட்டுமே அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவருக்கு 2007ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தார். 26 பெண்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. 22 ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் புறநகர் பகுதியில் அடுத்தடுத்து பெண்கள் திடீரென்று மாயமாகினர். இது குறித்த தீவிர தேடுதல் வேட்டையில் ராபர்ட் பிக்டனின் பண்ணையில் போலீசார் தேடுதல் நடவடிக்கையை நடத்தினர். இதில் அவரின் பன்றி பண்ணையில் இருந்து 33 பெண்களின் உடல் பாகங்கள் அல்லது டிஎன்ஏ மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டது.

வந்தது போலீஸ் அதிகாரி என தெரியாமல் 49 பெண்களை கொலை செய்து புதைத்து பன்றிகளுக்கு உணவாக்கியதாக ராபர்ட் பிக்டன் உளறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, பண்ணையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர்களும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். மாயமான பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராபர்ட் பிக்டன் இதுவரை 49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கியதாக கூறினாலும் அதில் 6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 25 ஆண்டுகளுக்கு பிணையும் மறுக்கப்பட்டது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
