சென்னையில் பரபரப்பு... 17 வயது சிறுவனைக் கொன்று அடையாறு ஆற்றில் உடலை வீசிச் சென்ற கொடூரம்!

 
காவிரி ஆறு வைகை தாமிரபரணி
 

சமீபமாக தமிழகம் முழுவதும் கொலைகளும், போதைப் பொருள் கடத்தலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு, அடையாறு ஆற்றில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைபள்ளத்தை சேர்ந்த சிறுவன் சஞ்சய் என்கிற வெள்ளை சஞ்சய்(17). சஞ்சய் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக பலமுறை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சய் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களிலும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் சென்னை ஜாஃபர்கான்பேட்டை அடையாற்றில் சடலம் ஒன்றும் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஆம்புலன்ஸ்

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற குமரன் நகர் போலீசார், அடையாற்றில் மிதந்துக் கொண்டிருந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போது, அது காணாமல் போன சஞ்சயின் உடல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சஞ்சயின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததோடு, அவரது சடலத்தின் அருகே அரிவாள் ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் அவர் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சஞ்சய் உடன் சுற்றித்திரியும் இரண்டு பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!