வாலிபர் கொன்று புதைத்த கொடூரம்... போலீசார் விசாரணை!
தூத்துக்குடி உப்பாற்று ஓடை பண்டு கரை பகுதியில் வாலிபர் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ரோட்டில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டு கரை பகுதியில் சில நாய்கள் ஏதோ ஒன்றை கடித்து குதறிக் கொண்டு இருந்தன. இதனை அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது, அந்த நாய் ஒரு மனித கையை கடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு 31 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடல் புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி தாசில்தார் முரளிதரன் வருவாய் ஆய்வாளர் செல்வ லட்சுமி கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். புதைக்கப்பட்ட உடல் இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட உள்ளது. அதன் பிறகே இறந்தவர் யார்?, எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
