பகீர்... இளம்பெண்ணை கொம்பால் முட்டி தரதரவென இழுத்துச் சென்ற எருமை மாடு!

 
மதுமதி

 
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அம்சாதோட்டத்தில் வசித்து வருபவர் வினோத். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி  மதுமதி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜூன் 16ம் தேதி மாலை மதுமதி திருவொற்றியூர் கிராம தெரு சோமசுந்தரம் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த வழியாக ஓடி வந்த எருமை மாடு ஒன்று அவரை தனது கொம்பால் முட்டி தூக்கி எறிந்தது.  

எருமை மாடு


அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டு அதனை விரட்டியடிக்க முயற்சித்தனர். அதற்குள்  மதுமதி அணிந்து இருந்த ஆடை எருமை மாட்டின் கொம்பில் சிக்கி  அவரை சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சாலையில் இழுத்தபடி எருமை மாடு ஓடத் தொடங்கியது.   பிறகு மாட்டின் கொம்பில் சிக்கிய மதுமதியை அங்கிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதனால் மதுமதியின் உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார்.

மாடு

 இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு  20 தையல்கள் வரை போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!