சுக்குநூறாய் சிதறிய கட்டிடம்.. சாத்தூர் வெடி விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

 
குண்டு வெடிப்பு வெடி விபத்து வெடிகுண்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் இன்று அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், பட்டாசு ஆலை செயல்பட்டு வந்த கட்டிடம் சுக்கு நூறாய் வெடித்து சிதறி தரைமட்டமாக காட்சியளிக்கும் வீடியோ வெளியாகி பதைபதைக்க வைக்கிறது. 
இந்த வெடிவிபத்து காரணமாக சுமார் 15 கி.மீ சுற்றளவுக்கு பயங்கர அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடிகள் வெடித்து வருவதால் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


 

பட்டாசு ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து சேர்ந்தன. சம்பவ இடத்திற்கு சாத்தூர் டிஎஸ்பி மற்றும் ஏராளமான போலீசார் குவிந்துள்ளனர். 

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு அருகே பொதுமக்கள் குவிந்த நிலையில், தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து வருவதால் அங்கிருந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

 

From around the web