புஷ்பா-2 படக்குழுவினருக்கு பயங்கர விபத்து... பலர் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி!

 
புஷ்பா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. செம்மர கடத்தல் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

பாக்ஸ் ஆபிஸில் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. தமிழிலும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புஷ்பா

இந்நிலையில் பட குழுவினர் படப்பிடிப்புக்கு சென்றபோது, சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், நல்ல கொண்டாமாவட்டம் நர்கெட்பள்ளி என்ற இடத்தில் படக்குழுவினர் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 'புஷ்பா 2' பட குழுவினர் சிலர், பலத்த காயமடைந்த நிலையில் ஒரு சிலர் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

புஷ்பா

விபத்தில் படுகாயம் அடைந்த புஷ்பா 2 படத்தின் படக்குழுவினர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அல்லு அர்ஜுன், புஷ்பா பட ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web