போலீசை பார்த்து எஸ்கேப் ஆன கார்.. ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதைப்பொருள் பறிமுதல்!

 
 புகையிலை பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாகச் செல்லும் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிறப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், நெடுஞ்சாலை ரோந்து மற்றும் சோதனைச்சாவடி போலீசாருடன் இணைந்து, மாவட்ட எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

புகையிலை

அப்போது அவ்வழியாக சென்ற கார் ஒன்று போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ​​காருக்குள் 400 கிலோ புகையிலை மற்றும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதைப்பொருள் மற்றும் கார்  பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web