ஆற்றில் பாய்ந்த கார்... 3 பேர் பலி... 2 பேர் கவலைக்கிடம்.. 3 பேர் மாயம்!
ஜம்முவில் சோனாமார்க்கில் இருந்து கந்தர்பால் மாவட்டத்தின் காங்கன் பகுதிக்கு டாக்சி ஒன்றில் 9 பேர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த கார் ககன்கீர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிந்து ஆற்றில் பாய்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இந்த கோர விபத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 2 பேர் படுகாயம் அடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். காரில் பயணித்த மற்ற 3 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது. விபத்து நடந்ததும் ஓட்டுனர் காரில் இருந்து கீழே குதித்து ஓட்டுனர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் முடுக்கிவிடப்பட்டு போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த பயணிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
