நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த கார்.. உள்ளே பார்த்தால் பெரும் அதிர்ச்சி.. பகீர் பின்னணி!

 
ஜார்ஜ் ஸ்கரியா

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரள மாநிலம் செல்லும் வழியில் கம்பம் மேடு சாலையில் கன்னிமார் ஓடை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் கேரள பதிவு எண் கொண்ட கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. மேலும், நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரில் 3 பேர் மயங்கி கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து, இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் பெண் உள்பட 3 பேர் பிணமாக கிடந்தனர். இதையடுத்து, காரில் சடலமாக மீட்கப்பட்ட மூவரும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன் படி, காரில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்கரியா (50), அவரது மனைவி மெர்சி (45), இவர்களது மகன் அகில் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில், அவர்கள் தற்கொலையா அல்லது கொலையா என சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web