தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் பாய்ந்த கார்.. 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி!

 
முக்காணி

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்த தர்மராஜன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் தனது நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து நாலுமாவடிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கார் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முக்காணியில் சாலையோர தெருக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த 4 பெண்கள் மீது வேகமாக கார் மோதியது.

இதில் நால்வரும் தாக்கப்பட்டதில் சாந்தி, அமராவதி, பார்வதி ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தாய் என்பவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.ஆனால் இறந்தவரின் உறவினர்கள் அப்பகுதியில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். கார் மோதி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!