சாலையில் படுத்திருந்த நாய் மீது ஏறி இறங்கிய கார்.. பகீர் சிசிடிவி வைரல்!

 
பெங்களூரு நாய்

பெங்களூருவின் ஜே.பி. நகர் 8வது கட்டத்தில், டிசம்பர் 31, 2024 அன்று சேகர் லேஅவுட்டில்  சாலையின் நடுவில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாயின் மீது கார் ஏறி இறங்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. இந்த கொடூரமான தருணம் சிசிடிவியில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.  சிவப்பு நிற கார் நாய் அருகே மெதுவாகச் செல்வதை காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில், ​​வாகனம் அதன் மீது  ஏறி இறங்கியது.



இதனால், நாய் வலியால் அலறி துடிக்கிறது. பின்னர் படுகாயமடைந்த நாய் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரலான வீடியோவிற்கு பதிலளிக்கும் விதமாக, தலகதபுரா காவல் நிலையத்தில் காரில் வந்த நபர் மீது BNS 325 மற்றும் PCA 1960 இன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது சட்ட நடவடிக்கை நடந்து வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web