ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னத்திற்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி... திமுகவினர் உற்சாகம்!

 
பேனா நினைவு சின்னம்

கடற்கரையில் மீன் விற்பனைச் செய்ய கூடாது. ஆனால் கடலுக்குல் பேனா நினைவு சின்னம் அமைக்கலாமா? என்று நாம் தமிழர் சீமான் உட்பட எதிர்கட்சி தலைவர்களும், சமூக, சுற்றுசூழல் ஆய்வாளர்களும் பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர், அந்த திட்டத்தைப் பற்றி எதுவும் அறிவிக்கப்படாமலேயே இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் சுற்றுசூழல் குழுவினருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், ஒப்புதல் கிடைத்துள்ளது. 

பேனா நினைவுச் சின்னம்

இதற்காக ரூ81 கோடி செலவில் 134 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு துறைகளில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.  இதற்காக  மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உட்பட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததற்கு பின் சமீபத்தில்  பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கலைஞர் பேனா

இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்த பரிசீலணைக்கு பிறகு பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திமுக தொண்டர்கள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web