டெல்லி புறப்பட்டார் முதல்வர்... இன்று இண்டியா கூட்டணி ஆலோசனைக்கூட்டம்!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களிலும், இண்டியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி டெல்லி, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேதசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் முழுவதும் கைப்பற்றினாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேசதம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நிதிஷ்குமார், சந்திரபாபு நாடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகின. ஆனால், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு தங்களின் ஆதரவு பாஜகவுக்குதான் என திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!