பரந்தூர் மக்களை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்… தவறினால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்... விஜய் ஆவேசம்!

 
ஸ்டாலின் விஜய்
 


 
தமிழக வெற்றிக் கழகத்தின்  மாநில செயற்குழுக் கூட்டம் இன்று ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, அதன் நிறுவனர் விஜய்யை கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

விஜய்

இதனை தொடர்ந்து, பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் .  விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இல்லையெனில் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உருவாகும் எனவும் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலின் கடிதம்

இது குறித்து விஜய், ”பரந்தூர் மக்களை ஏன் முதல்வர் இப்போது வரை சந்திக்கவில்லை. இப்பவும் ஒன்றும் குறைந்துபோகவில்லை. பரந்தூரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை, முதல்வர் நேரில் சந்தித்து பேச வேண்டும். அமைச்சர்களோ, அதிகாரிகளோ அல்ல.  நீங்களே போய் பேசணும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை நீங்களே கொடுக்கணும். இதையெல்லாம் செய்யாமல் முதல்வர் கடந்துபோக நினைத்தால், பரந்தூர் பகுதி விவசாயிகளையும் பொதுமக்களையும் நானே அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழலை நீங்க உண்டாக்க மாட்டீங்கன்னு நான் நினைக்கிறேன். அதையும் மீறி ஒரு சூழல் வந்தால், நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?