முதல்வரின் சுற்றுப்பயணம்.. இன்றும் ட்ரோன்கள் பறக்க தடை... கலெக்டர் உத்தரவு!

 
ட்ரோன்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர், காட்பாடி, திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று ஜூன் 26ம் தேதி இந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திட்ட பயன்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் செல்லும் இடங்களில் ரோடுஷோ நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

ஸ்டாலின்

நலத்திட்ட பயன்பாடுகளை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த வகையில் நேற்று ஜூன் 25 தேதி ரயில் மூலம் காட்பாடி சென்றடைந்தார். 

ட்ரோன்
இதனையடுத்து நேற்றும், இன்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பிறப்பித்துள்ளார்.  

ஜூன் 25, 26ல் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதித்துள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது