தாயை பறிகொடுத்து கதறி அழுத குழந்தை.. ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்திய போலீஸ்.. நெகிழ்ச்சி பின்னணி!

 
 காரைக்கால் கடற்கரை

நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் காரைக்கால் கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். கடலில் குளித்து உற்சாகமடைந்தனர். எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மூன்று வயது சிறுவன் தானே அழுது கொண்டிருந்தான். சிறுவன் அழுது கொண்டிருப்பதை பார்த்த போலீசார் உடனடியாக அந்த சிறுவனை அழைத்து வந்து பெயர் மற்றும் பிற விவரங்களை கேட்டறிந்தனர்.

ஆனால் சிறுவன் அழ ஆரம்பித்ததால் போலீசார் சிறுவனுடன் விளையாடி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சிறுவன் மீண்டும் அழ ஆரம்பித்தான். இதனையடுத்து போலீசார் கடற்கரை முழுவதும் சிறுவனின் பெற்றோரை தேடினர். இதற்கிடையில், அவர்கள் சிறுவனுக்கு ஐஸ்கிரீம் மற்றும் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து கவனித்துக் கொண்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனை தூக்கிக்கொண்டு போலீசார் அலைந்த நிலையில், ஒரு கட்டத்தில் சிறுவனின் பெற்றோர் பதற்றத்துடன் வந்து, இது எங்கள் குழந்தை என்று கூறினர். தவறுதலாக விட்டுவிட்டோமே என்று அழுது புலம்பினார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சிறுவனை ஒப்படைத்தனர். அந்த சிறுவனை தாய் உள்ளத்துடன் காவல் துறையினர் கவனித்து வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web