மாணவர்களே... உஷார்... தமிழகத்தில் இந்த 6 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவில்லை!

 
பொறியியல் கல்லூரி

சில ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய காலத்தில் பொறியியல் கல்லூரிகள் பெருகின. அனைத்து மாவட்டங்களிலும் ஏரானமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால், லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்துள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அங்கீகாரம் புதுப்பித்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லூரிக்கான உரிமம் ரத்து செய்யப்படும்.

பொறியியல் கல்லூரி

அந்த வகையில் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இன்ஜினியரிங் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்து வந்தனர்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் விண்ணப்பிக்க கடந்த 23ம் தேதியும், அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பிக்க கடந்த 24ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்து கொள்வதற்கான விண்ணப்பப்பதிவு முடிந்து விட்ட நிலையில், தமிழகத்தில் 6 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் அதற்கு விண்ணப்பிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொறியியல் கல்லூரி

இதன்படி, அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது. இதன் மூலம் இந்த ஆண்டு இன்ஜினியரிங் கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைகிறது. 

 ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web