ரியல் ஹீரோ... பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞரை பார்க்காமலேயே காப்பாற்றிய நடத்துனர்... வைரல் வீடியோ!

 
கண்டக்டர்

 கேரளாவில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர்  ஒருவர் கையில் எந்த பிடிமானமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்குவதற்காக கையில்  எந்தவித பிடிமானமும் இல்லாமல் நின்றிருந்தார். இருக்கை காலியாக இருந்தாலும் அவர் டிக்கெட் வாங்குவதற்காக படியின் நுனியில் நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பேருந்து ஒரு திருப்பத்தில் திடீரென அந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழப்போனார். கண்டக்டர் அவரை பார்க்காமலே இளைஞரை பிடித்து பத்திரமாக பேருந்திற்குள் இழுத்துவிடுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  இச்சம்பவம் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை  பார்த்த நெட்டிசன்கள்  அந்த நடத்துனரை  ஸ்பைடர்மேன், சூப்பர் மேன்,. மின்னல் முரளி என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web