நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு போதையில் தூங்கிய கண்டக்டர்... பொதுமக்கள் அவதி!

 
பேருந்து

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு மற்றும் சோளிங்கர் என  2 இடங்களில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. சோளிங்கர் பணிமனையில் இருந்து காவேரிப்பாக்கம், திருத்தணி, அரக்கோணம் ஆகிய  பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள்இயக்கப்பட்டு வருகிறது.மேலும் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இருந்து தடம் எண்.51 அரசுப்பேருந்து நேற்று மாலை காவேரிப்பாக்கத்திலிருந்து   3 மணிக்கு செல்ல வேண்டிய அரசுப்பேருந்து  3.40 மணிக்கு சென்றுள்ளது.

போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்

அப்போது அரசு பேருந்தில்  அதிகளவில் பெண்கள் பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்து காவேரிப்பாக்கம் பேருந்து   நிலையத்தில் இருந்து பஜார் வழியாக சோளிங்கர் நோக்கி சென்றது. அப்போது  கண்டக்டர் சிவக்குமார் அதிக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சஸ்பெண்ட்


இதில் போதை தலைக்கேறிய உடன், பேரூராட்சி மாங்காளி அம்மன் கோயில் அருகே சென்றபோது, பேருந்தை நிறுத்திவிட்டு கோயில் வளாகத்தில் கண்டக்டர் சிவக்குமார் படுத்து தூங்கிவிட்டார். பேருந்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் பிறகு  பேருந்து பயணிகள் இல்லாமல் சோளிங்கர் நோக்கி சென்றது. இச்சம்பவத்தை தொடர்ந்து, மது போதையில் பேருந்தை  நிறுத்தி விட்டு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய கண்டக்டர் சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக  வேலூர் அரசு மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் இன்று தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web