பிற்பகல் 3 மணிக்கே தொடங்கும் தவெக மாநாடு!

 
தவெக


மதுரை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு  பாரபத்தியில் இன்று ஆகஸ்ட் 21ம் தேதி  நடைபெறுகிறது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தில் கடுமையான வெயில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.  இந்நிலையில், தவெகவின் 2வது மாநில மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளது. 

தவெக

இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 4 மணிக்கு மாநாட்டைத் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.ஆனால் மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலில் அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தவெக மாநாடு விஜய்

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொண்டர்கள் நிழலைத் தேடி நாற்காலிகளுடன் செல்வதாகவும், மாநாடு நடைபெறும் இடத்தில் உரிய வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ஏற்பட்ட சிரமங்களை (வெயில், உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல்) கருத்தில் கொண்டு, தொண்டர்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் இருக்கவும், மாநாட்டை பிற்பகல் 3 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?