அதிர்ச்சி... எஸ்.பி அலுவலகத்தில் மனைவியைக் குத்திக் கொன்று விட்டு தப்பியோடிய கான்ஸ்டபிள்!

 
கான்ஸ்டபிள்

கர்நாடக மாநிலத்தில், எஸ்.பி அலுவலகத்தில் தன் மீது புகாரளிக்க வந்த மனைவியை அனைவர் முன்னிலையிலும் கத்தியால் குத்திக் கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் காவலர் ஒருவர். கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தைச் சேர்ந்தவர் லோக்நாத். ஹாசன் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும் மம்தா எனும் பெண்ணுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

கான்ஸ்டபிள்
கடந்த சில மாதங்களாகவே தம்பதியரிடையே அடிக்கடி தகராறு நீடித்து வந்த நிலையில், தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்து வந்த மம்தா, தனது கணவர் மீது புகாரளிப்பதற்காக மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு இன்று சென்றுள்ளார். அப்போது தன் மீது புகாரளிக்க வந்த மனைவியைக் கண்டதும் கணவர் லோக்நாத் மம்தாவிடம் தகராறில் ஈடுபட்டார்.இருவரும் வாய் தகராறில் ஈடுபட்ட நிலையில், திடீரென அனைவர் முன்பும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மம்தாவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். 

கான்ஸ்டபிள்
அடுத்தடுத்த விழுந்த பலமான கத்திக்குத்து காரணமாக அதே இடத்தில் மம்தா சரிந்து கீழே விழுந்தார். அங்கிருந்த போலீசார் உடனடியாக மம்தாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மம்தா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஹாசன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோக்நாத்தை தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web