அயோத்தி ராமர் கோவில் அமைந்திருக்கும் தொகுதி.. படு தோல்வியை சந்தித்த பாஜக வேட்பாளர்!

 
அயோத்தி ராமர்

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பாஜகவிடம் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ‘இந்தியா’ கூட்டணி 235 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மோடி - ராகுல்காந்தி
.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக  வேட்பாளர் சல்லு சிங் தோல்வியடைந்தார். தற்போதைய நிலவரப்படி, பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,51,289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்கிடையில், 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' போடுவார்கள், கோவிலை புல்டோசர் மூலம் தகர்ப்பார்கள் என, பா.ஜ.க  தலைவர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web