வெடித்த சர்ச்சை.. பாஜக எம்.எல்.ஏ காலில் விழுந்து கெஞ்சிய டெல்லி அமைச்சர்.. பகீர் வீடியோ வைரல்!

 
டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

டெல்லியில் பேருந்தில் மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், 2015ஆம் ஆண்டு, அரசுப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக, பயணிகள் காப்பாளர் (பஸ் மார்ஷல்) பதவியை உருவாக்கினார். இதன்படி ஊர்க்காவல் படையினரும் இடம் பெற்றுள்ளனர்
10 ஆயிரம் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


இந்நிலையில், பாதுகாவலர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கடந்த மாதம் டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் சக்சேனாவிடம் நேரில் முறையிட டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தலைமையிலான குழு ஒன்று கூடியது. ஆனால் அவர்கள் ஆளுநரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில், டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தாவை ஆம் ஆத் கட்சியினர் சந்தித்து கவர்னரை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தனர், ஒரு கட்டத்தில் அமைச்சர் சவுரப் பரத்வாஜ், பா.ஜ.க. எம்எல்ஏவின் காலில் விழுந்து கெஞ்சினார். டெல்லி அமைச்சர், பாஜக எம்எல்ஏ காலில் விழும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!