“அஜித் சாருடனான உரையாடல் அமைதியாக இருந்தாலும் அர்த்தம் ஆழமானது..” நடிகர் சூரி நெகிழ்ச்சி!
நடிகர் அஜித் குமாரை சந்தித்த அனுபவத்தை நடிகர் சூரி தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சூரி, தனது அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் அஜித் குமாரை சந்தித்துள்ளார்.
அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது - உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
— Actor Soori (@sooriofficial) November 13, 2025
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது… ❤️🤝🙏💐 pic.twitter.com/2PgBA1APi3
நடிகர் அஜித்துடனான சந்திப்பு குறித்து சூரி தனது எக்ஸ் பக்கத்தில், “அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும், அதில் இருந்த அர்த்தம் ஆழமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சூரியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் “அஜித் சாரின் நம்பிக்கைமிகு பணிவு நம்மை என்றும் கவர்கிறது” என பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
